வருமானம் பெருக்க, 7 வழிமுறைகள் 👍
கொரொனாவிலும், வெற்றி நமதே !!!
நண்பர்களே !!!
இந்த வருடம் அனைவருக்கும் எதிர்பார்க்காத பல திருப்பங்களை பார்த்த வருடமாக இருக்கும்....
குறிப்பாக, தொழில் மற்றும் முதலீடு துறையில் பல ஏற்றம், இரக்கம் கண்ட வருடமாக இருக்கும்...
Stock Market Ups and Downs |
இந்த தருணத்திலும், சில முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வெற்றியுடன் பயணம் செய்து வருகின்றனர்..
அப்ப, இந்த ஏற்ற இரக்கம் எல்லாம் யாருக்கு பாதிப்பு அதிகம் ?
பாதிப்பு எல்லாம் நடுத்தர தொழில் முனைவோர் மற்றும் சிறு முதலீட்டாளர்களுக்கே...
இந்த சூழலை எதிர்காலத்தில் வாராமல் தவிர்க்க, பல வெற்றியாளர்கள் பயன்படுத்தும் 7 விதமான வருமானம் ஈட்டும் வழிகளை பார்க்கலாம் ....
இந்த பதிவில் இருக்கும் 7 வழிகளில் ஏதேனும் நான்கு அல்லது ஐந்து தொழில் முறைகளை பயன்படுத்தி நீங்களும் உங்கள் வெற்றிப்படிக்கட்டில் கால்பதியுங்கள்....
1. சம்பளம் (Salary)...
ஒரு சராசரி குடும்ப சூழலில் வளர்ந்த அனைவருக்கும் இதுதான் முதல் படி...
இந்த வழிமுறை தான் உங்களுக்கு ஒரு தொடக்கமாகவே இருக்க வேண்டும்...
இந்த முறையில் இருந்து உங்களால் முடிந்தவரை சேமிக்க தொடங்குங்கள் ...
உங்களுக்கு ஒரு நிலையான வருமானம் கிடைக்கிறது... அதில் இருந்து உங்களின் சேமிப்பை பெறுக்கிக்கொண்டே இருக்க வேண்டும்..
உங்கள் சேமிப்பை பெருக உதவும், என்னுடைய முந்தைய பதிவை கீழே click செய்து படியுங்கள். அதை பின்பற்றி உங்களின் அடுத்த படிக்கு முன்னேற என்னுடைய வாழ்த்துக்கள்...
நீங்களும் பணக்காரர் ஆகலாம்
நீங்கள் முன்பே இந்த முறையில் சேமிப்பை பெருக்கி கொண்டு உள்ளவரா... நீங்கள் அடுத்த நிலைக்கு போகலாம், ஆனால் நீங்கள் இந்த முறையை கைவிட கூடாது ...
இது உங்களின் அடிப்படை முதலீடு ...
2. முதலீடு மற்றும் நிரந்திர வைப்பு நிதி (Portfolio)
நீங்க இரவு பகலா வேலை செஞ்சு சேமித்த பணத்தையெல்லாம் உங்க வைப்புநிதி (deposits), பரஸ்பர நிதி (Mutual Funds) மற்றும் பங்கு சந்தை (Share Market)யில் முதலீடு செய்து, நீங்கள் வருமானம் பெறலாம்...
உங்கள் மாத சம்பளத்தில் குறைந்தது 500 ரூபாய் இருந்தால் போதும் உங்களால் பரஸ்பர நிதியில்(Mutual Funds) முதலீடு செய்ய முடியும்...
உங்கள் முதலீட்டை பெருக்க வேண்டும் என்றால், உங்கள் வருமானத்தில் இருந்து 50-30-20 விதியின் படி நீங்கள் உங்களுக்கு ஒரு பொருளாதார திட்டத்தை (Financial planning) பின்பற்றவேண்டும். இந்த திட்டமிடல் உங்கள் சேமிப்பையும் முதலீட்டையும் அதிகப்படுத்தும்...
50-30-20 விதியை பற்றி தெரிந்துகொள்ள கீழே click செய்து படியுங்கள்...
சேமிப்பை பெருக்க.. 50-30-20 விதி !!!
நீங்கள் mutual funds அல்லது பங்கு சந்தையில் முதலீடு செய்ய உங்களுக்கு ஒரு DEMAT Account தேவை... அதை zerodha அல்லது 5paisa இணையத்தில் பெறலாம், இதில் முதல் மாத சந்தா இலவசமாகவும் பெறலாம்...
உங்களுக்கு பங்கு சந்தையில் முதலீடு செய்ய போதிய தகவல்கள் மற்றும் முதலீட்டு நுட்ப்பம் தெரியவில்லை என்று வருந்தவேண்டாம்...
உங்களுக்கு யோசனைகள் தந்து, உங்களை mutual funds அல்லது share market யில் முதலீடு செய்ய உங்களுக்கென ஒரு பரிந்துரையாளர்கள் இருப்பார்கள்...
அவர்கள் உதவியுடன் உங்கள் முதலீட்டு கனவை வெற்றியாக தொடரலாம்...
3. பரிவர்த்தனை (Transactional)
பரிவர்த்தனை ??
பரிவர்த்தனை என்றால் புதிது ஒன்றும் இல்லை...
Reselling |
நீங்கள் உங்களுக்கு தேவையான பொருள்களை கடைக்கு அல்லது இணையதளம் வழியில் வாங்குவதுதான் பரிவர்த்தனை முறை என்று குறிப்பிடுகின்றனர்...
அதாவது, நீங்கள் மொத்த விலையில் வாங்கி சில்லறையில் வியாபாரம் செய்வது...
மொத்த விலையில் வாங்கி சில்லறையில் விற்பனை செய்ய கடை தேவை, அதுவும் ஒரு சரியான இடத்தில் தேவை...
அடுத்தது வாடிக்கையாளர்கள் எப்பொழுதும் நிறைந்து இருக்க வேண்டும்... இதற்க்கு பணம் நிறைய தேவைப்படும் ??? என்று எண்ணவேண்டம்...
வளர்ந்து வரும் இணைய வழி சந்தைகளில், உங்களுக்கு ஒரு மொபைல் (mobile) போதும் ...
நீங்கள் பொருள்களை வாங்கவும், விற்க்கவும், லாபம் பார்க்கவும்....
Mobile Can Do... |
உங்களுக்கு இந்த முறை பற்றி மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்றால் இந்த பதிவில் comment போடுங்க ... உங்களுக்காக விரைவில் இதை பற்றிய தகவல்களுடன் ஒரு பதிவு இந்த தளத்தில் பதிவிடுகிறேன்...
4. வாடகை (Rental)
வாடகைன்னு பார்த்ததும்... உங்களுக்கு வீடு வாடகைக்குவிடுவது தான் தோன்றும்...
அது சரியானது தான் ... ஆனா வெறும் வீடு மட்டும் வாடகைக்கு விடுவது இல்லை... மேலும் பல உள்ளது...
Car Rental |
இப்பொழுது நீங்கள் ஒரு car வச்சுறுகிங்க, இல்ல ஒரு காலி மனை வச்சுறுகிங்க... இதையும் நீங்க வாடகைக்கு விடலாம்...
காலி மனையை, வாகனம் நிறுத்தும் இடமாகவோ (Parking Area) அல்லது ஒரு சிறிய நிகழ்ச்சிக்கு (Party hall) வாடகைக்கு விடலாம்...
அதேபோல், உங்களின் கார், ஆட்டோ, உற்பத்தி இயந்திரம் போல எல்லாமே வாடகைக்கு விட்டு வருமானம் பெறலாம்...
அனால் ஒன்று நினைவில் இருக்கட்டும் ... உங்களுக்கு வாடகையாக கிடைக்கும் வருமானம் உங்களின் செவுகள் போக மீதம் இருக்க வேண்டும்...
ஒர் உதாரணம்... நீங்கள் காலி மனையில் மாதம் 10000 ரூபாய் தொகை கிடைக்குது... ஆனால் உங்கள் மனைக்கு மாத தவனை 8000+அந்த மனையை அவ்வபோது சரிசெய்ய 3000 என்றால் ... உங்களுக்கு -1000 ரூபாய் செலவில் முடியும்... இதுவே உங்களுக்கு அந்த மனையில் மாதம் 15000 ரூபாய் தொகை கிடைக்குது என்றால் 4000 ரூபாய் உங்களுக்கு வருமானம்... இதுவே உங்கள் கவனத்தில் இருக்க வேண்டிய ஒன்று...
5. காப்புரிமை (Copyright or Royalty)
நீங்க ஒரு எழுத்தாளர் அல்லது அறிவியலில் ஓர் கண்டுபிடிப்புக்கு உங்களிடம் ஒரு காப்புரிமை உள்ளது, அதை பிரசுரம் செய்து விற்பனை செய்யும்போது. விற்பனையாளரின் லாபத்தில் ஒரு பங்கை, நீங்கள் உங்கள் உரிமம் தொகையாக பெறலாம்...
ஒவ்வொரு முறையும் விற்பனையாளர் பிரசுரம் செய்து விற்பனை செய்யும் போது , லாபத்தில் ஒரு பங்கை நீங்கள் பெறலாம்...
6. சேவைக்கு மாத சந்தா அல்லது மதிப்பு கூட்டப்பட்ட சேவை (Recurring service payment or Premium service)
உங்கள் மொபைல் சேவைக்கு, நீங்கள் மாதம் சந்தா தொகை செலுத்துகிறீர்கள் அல்லது
நீங்கள் amazon இணையத்தளத்தில், முதன்மை வாடிக்கையாளர் (amazon prime) சேவையை பயன்படுத்த மாதம் தொகை செலுத்துகிறீர்களா...
அதேபோல் நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரும் சேவைகளுக்கு மாதம் ஒரு குறிப்பிட தொகையை கட்டணமாக பெறலாம்... இதை நீங்கள் மதிப்புகூட்டப்பட்ட சேவையாக கொடுக்கலம்...
அதற்காக உங்களின் சேவையும், தொகைக்கு ஏற்றாற்போல் மேன்படுத்தவேண்டும்... இல்லை என்றால் உங்கள் வாடிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லவேண்டும் ...
7. மூலதனம் (Capital)
உங்களின் நீண்டகால வைப்பு நிதியின் வட்டியில் பெறும் வருமானம் மற்றும் உங்களின் பங்கு சந்தை கணக்கில் நீங்கள் வைத்திருக்கும் நீண்டகால பங்கின் தற்போதைய சந்தை மதிப்பில் பெறும் வருமானம் இவையெல்லாம் மூலதனம் என்று சொல்லலாம்...
Capital Gain |
இந்த 7 வகையான வருமானம் ஈட்டும் முறையில் குறைந்தது 5 முறையாவது உங்களின் வருமானத்தில் பங்களிக்கவேண்டும் ... அப்பொழுதுதான் உங்களுக்கு எந்த ஒர் சூழ்நிலையியும் பொருளாதாரத்தின் ஏற்ற இரக்கம், எந்த ஓர் பாதிப்பும் தராது...
இந்த பதிவில் இருந்து நீங்கள் ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்து, அதை நன்கு ஆய்வுசெய்த பின் முயற்சிக்கவும் ...
அந்த முயற்ச்சிகளில் பொறுமையும், நிதானமும் மிகவும் முக்கியம் ...
நீங்கள் முழுமனதாக எடுத்துக்கொள்ளும் முறையை நீங்கள் பின்பற்றவும் ...
வாழ்க வளமுடன் ...
படித்திடு, முயன்றிடு, பகிர்ந்திடு...
All The Best !!!
Thanks for Reading till END 😊
1 comment:
Good na.. 👌🏼👌🏼
Post a Comment