சேமிப்பை பெருக்க.. 50-30-20 விதி !!!

நண்பர்களே!!!

நீங்க நல்லா கவனிச்சிங்கனா பணக்காரர்களுக்கு பணம் எப்படி வேலை செய்கிறது என்று நல்லா தெரியும்... 


அவர்கள் பணத்தின் முதலீட்டு விதியை முழுமையாக்க அறிந்து இருக்கின்றனர். அதாவது  அவர்கள் பொருளாதார திட்டத்தில் (Financial Planning) சிறந்தவர்கள்.. 


நம்மில் பலர் பொருளாதார திட்டத்தை (Financial planning) பற்றி கூட அறிந்து இருக்க வாய்ப்பில்லை, சிலர் பொருளாதார திட்டம் (Financial planning) என்பது தொழிலதிபர்கள் சம்மந்தப்பட்டது என்று நினைத்து கொண்டு உள்ளனர்....

இந்த பதிவில்  பொருளாதார திட்டம் (Financial Planning) என்றால் என்ன என்று  எளிமையக பார்கலம்... 

பொருளாதார திட்டத்தை, 50-30-20 விதியென்றும் கூறலாம் (50-30-20 Rule).... 


உங்கள் மாத வருமானத்தை மூன்று பங்காக பிரிக்கவும்.
 
அதில் முதல் பங்கு 50% சதவீதம்மாக இருக்க வேண்டும்.

அந்த 50% சதவீதம், உங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள பயன்படுத்திக்கொள்ளவும்.... 
அதாவது உணவு, உடை, குழந்தைகளின் கல்வி மற்றும்  பல...

அடுத்த பங்கு மாத வருமானத்தில் 30% சதவீதம்மாக இருக்க வேண்டும்.

அந்த 30% சதவீதம், உங்கள் பொழுதுபோக்கு, பிரயாணம், குழந்தைகளை வெளியில் அழைத்து செல்ல மற்றும் பல செலவுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளவும்.... 

கடைசி பங்கு மாத வருமானத்தில் மீதமுள்ள 20% சதவீதம்.
இது  மிகவும் முக்கியம் ஆனது, இதை உங்களின் சேமிப்பு அல்லது முதலீட்டுக்கு வைத்துக்கொள்ளாவும்.... 



இப்ப உங்களுக்கு மாதம் 40000 ரூபாய்  சம்பளம்... 

அதுல 50% சதவீதம் 20000 ரூபாய் உங்க அத்தியாவசிய செலவுக்கு போகட்டும்... 

40000 ரூபாயில் 30% சதவீதம் 12000 ரூபாய், இது உங்கள் பொழுதுபோக்கு செலவுக்கு போகட்டும் ... 

கடைசி 8000 ரூபாய்ய... நீங்க கண்டிப்பா சேமிக்கனும் ... 

8000 ரூபாய் சேமித்துயென பயன் என்று யோசிக்கிறிங்களா ?? 

மாதம் 8000 ரூபாய் என்று ஒரு வருடம் சேமித்து வைச்சிங்கனா... 
ஒரு வருடத்துல 96000 உங்க சேமிப்புல இருக்கும் .... 

இப்படி செய்யும் போது 10 வருடத்க்கு அப்புறம், இது கூட்டு விளைவு (Compound Effect) என்று முறையில் உங்க சேமிப்பு 10 முதல் 11 லட்சத்த கடந்து இருக்கும்... 

சரி... 

இப்ப நீங்க உங்க சம்பளத்துல 20% சதவீத்த சேமிக்க முடிவு எடுத்துவிட்டார்கள்...

ஆனா எதுல முதலீடு செய்யலாம் ? எத்தனை சதவீதம் முதலீடு செய்யலாம்?? 


இந்த குழப்பத்த குறைக்க.... இதோ உங்களுக்கு சில பரிந்துரைகள்....

உங்களுடைய வயத 100ல இருந்து கழித்தால் வரும் சதவீதத்தை

Share Market (Equity Market) மற்றும் 
Mutual Funds (Equity Funds)யில் முதலீடு செய்யலாம்... 

மீதமுள்ள சதவீதத்தை 

Mutual Funds (Debt Funds) மற்றும்
Fixed Deposits & Recurring Deposits யில் முதலீடு செய்யலாம் .... 

ஒரு எடுத்துக்காட்டாக... 

உங்க வயது 30னு வச்சுகொங்க ... இப்ப 
100-30= 70... 

இப்ப 70% உங்க சேமிப்ப 
Share Market (Equity Market) மற்றும் 
Mutual Funds (Equity Funds)யில் முதலீடு செய்யலாம்... 


மீதமுள்ள 30% சதவீதத்த... 
Mutual Funds (Debt Funds) மற்றும்
Fixed Deposits & Recurring Deposits யில் முதலீடு செய்யலாம் .... 

இப்ப உங்க வயது 60னு வச்சுகொங்க... 
100-60=40... 

40% சதவீதத்த 
Share Market (Equity Market) மற்றும் 
Mutual Funds (Equity Funds)யில் முதலீடு செய்யலாம்... 

ஏன்யென்றல் இளம் வயதில் அதிக ஆபத்தில் (high risk) துணிந்து முதலீடு செய்ய முடியும்....
வயது ஆனா பிறகு பொறுப்பு அதிகம் ஆகும் போது ஆபத்து இல்லாத குறைந்த வட்டி கிடைக்கும் முதலீடு என்று சொல்லப்படும்

Mutual Funds (Debt Funds) மற்றும்
Fixed Deposits & Recurring Deposits யில் முதலீடு செய்யலாம் .... 

இந்த பதிவ படிச்சுட்டு நீங்களும் சேமிக்கனும்னு  நினைக்கிறிங்க ஆனா அதை பண்ண முடியலனா ஒரே ஒரு காரணம் தான் இருக்கும் ... 

நீங்க உங்க செலவு போக மீதம் தான் சேமிப்புனு முடிவுல இருக்கீங்க ... 
The Richest Man in the Babylon கதைல சொன்ன ரகசியம் மாதிரி நீங்க உங்க வருமானத்தில்  முதல்ல சேமிப்புனு புரிஞ்சாதான் உங்களின் சேமிப்பு பெருக்கும் .... 

The Richest Man in the Babylon கதையை படிக்க  இங்கே பார்க்கவும்... 


படித்து மகிழ்.!!. சேமித்து வாழ்.!!. 

No comments:

Write to Us !!

Name

Email *

Message *

Powered by Blogger.