நீங்களும் பணக்காரர் ஆகலாம்


ஒரு கிராமத்துல ஒரு சிற்பி இருந்தாரு, அவருக்கு பணக்காரனாகணும்னு  ஆசை, அதுக்கு ரொம்ப கடுமையா வேலை செஞ்சாரு.


ஒரு நாள் அந்த ஊருல இருந்த பணக்காரர், 

அந்த சிற்பியின் சிற்பக்கூடத்துக்கு வந்து அவரு வீட்டுக்கு ஒரு சிற்பம் செய்ய சொன்னாரு.

இந்த வேலைய இரண்டு நாள்ல முடிச்சுட்டேனா, நீ கேக்குறதைவிட அதிகம் பணம் தரேன்னு சொன்னாரு .

இதற்கு சிற்பி, கண்டிப்பா முடிச்சு தரேன்னு சொன்னாரு.

சிற்பி சாப்பாடு, தூக்கம் இல்லாம வேலை பார்த்தாரு; ஆனாலும் அவரால அந்த சிற்பத்தை முடிக்கமுடியலை.

இரண்டு நாள் கழிச்சு அந்த பணக்காரர் வந்தாரு, சிற்பம் முடிக்கலைனு தெரிய வரவும் ரொம்பவும்  வருத்தப்பட்டாரு. 

சிற்பி :  

"ஐயா, எனக்கு நீங்க எப்படி பணக்காரர் ஆகுறதுனு சொல்லி கொடுங்க,

நான்  உங்களுக்கு இந்த சிற்பத்தை நாளைக்கே முடிச்சு கொடுக்குறேன்" என்று  சொன்னாரு.

பணக்காரர்:  

சிரிச்சிட்டே, "சரி, நீங்க நாளைக்கு இந்த சிற்பத்தை முடிங்க, நான் உங்களுக்கு அந்த ரகசியத்த சொல்லுறேன்னு " என்று  சொன்னாரு. 

அந்த சிற்பி  ரொம்ப உற்சாகமா வேலை செஞ்சு அந்த சிற்பத்த முடிச்சுட்டாரு.


அடுத்த நாள் அந்த பணக்காரர் வந்து சிற்ப வேலை முடிந்ததை பார்த்து ரொம்ப மகிழ்ச்சி அடைந்தார்.

சிற்பி: " ஐயா, நீங்க எனக்கு அந்த ரகசியத்த சொல்லுங்க" என்று  கேட்டாரு.

பணக்காரர்: நல்லா கேட்டுக்கோங்க நீங்க செஞ்ச வேலைக்கு அதிகமான கூலியா இந்த ரகசியத்த சொல்லுறேன்.

எனைக்காவது  நீங்க உங்க வருமானத்துல இருந்து  உங்களோட வேலைக்கு சம்பளம் குடுத்துருக்கீங்களா ?

சிற்பி : என்ன ஐயா ? எனக்கு எதுக்கு சம்பளம்? இந்த வருமானம் எல்லாம் எனக்கு  தானே !!

பணக்காரர்: அப்படி கிடையாது, நீங்க இப்ப கிடைச்சா பணத்தை அப்படியே 

 வேற செலவுக்கு பயன்படுத்திருவீங்க, கடைசியில் உங்களுக்கு  எதுவும் இருக்காது 

இனி மேல் உங்களுடைய வருமானதுல 10% உங்களக்குன்னு சம்பளமா எடுத்துக்கோங்க,


 

அப்படி நீங்க எடுத்து சேமித்து வச்ச பணத்துல இருந்து உங்களுக்கு வருமானம் வரும் வரை இப்படி எடுத்து வச்சுட்டே  இருக்கனும்.

இதை சொல்லிட்டு அந்த பணக்காரர் அங்க இருந்து கிளம்பிட்டாரு.

.

...

......

.........

ஒரு வருடம் கழிச்சு அந்த பணக்காரர் சிற்பியா பார்த்தாரு

சிற்பி: "ஐயா, நீங்க சொன்ன மாதிரி, நான் என்னோட  எல்லா  வேலைலயும் கிடைச்ச பணத்திலிருந்து ஒரு பகுதியை சேமிதித்து வச்சேன்" என்று சொன்னாரு.  

பணக்காரர்: ரொம்ப  சந்தோசம் , அப்படி சேமிதித்த பணத்தை என்ன பண்ணுனீங்க ??

சிற்பி : "நான் அதை வச்சு நல்லா துணி வாங்கினேன், அப்புறோம் ..."  என்று ஆரம்பித்தார் 

பணக்காரர் : இங்க பாருங்க சிற்பி, நீங்க ஒரு மரம் வச்சுருக்கீங்க ஆனா அதை வளரவிடாம நீங்களே அத வெட்டிடுறீங்க ...

சிற்பி: என்ன ஐயா சொல்லுறீங்க ??

பணக்காரர் : ஆமா சிற்பி, 

நீங்க சேமிதித்து  வைக்குற பணத்துல இருந்து உங்களுக்கு இன்னுமொரு வருமானம் வரணும்.

சேமிப்பு எப்பவுமே உங்களுக்கு ஒரு வருமானம் கொடுக்கனும், அப்பதான்  நீங்க பணக்காரர்  ஆக முடியும்.

சிற்பி : ஐயா என்னோட தவற புரிச்சுக்குட்டேன் 

.

...

......

.........

மறுபடியும் ஒரு வருடம் கழிச்சி அந்த பணக்காரர் சிற்பியா பார்த்தார்.

பணக்காரர் : சிற்பி, இப்ப உங்க சேமிப்ப என்ன பண்ணுனீங்க ?

சிற்பி : ஐயா , நான் வெள்ளி காசுகள் வாங்கினேன் ...

பணக்காரர் : அற்புதம் சிற்பி, அதை என்ன பண்ணுனீங்க ?

சிற்பி : அதை நான்  ஒரு கேடயம்மா  செஞ்சு வச்சுருக்கேன், 

கொஞ்ச நாள் அப்புறோம்  அதை நல்ல  விலைக்கு வித்துடுவேன் " என்றார் 

பணக்காரர் : அருமை சிற்பி, உங்கள் சேமிப்பில் இருந்து எப்ப உங்களுக்கு தேவையான வருமானம் கிடைக்குதோ  அப்ப  தான்  நீங்க செலவு செய்ற நேரம் என்றார் 


இக்கதையின் தார்மீகம் :

** உங்கள் வருமானத்தில் 10% உங்களுக்காக சம்பளமாக எடுத்து சேமித்து பழகு 

** உங்கள் சேமிப்பு போக மற்றவை உங்கள் செலவுகள் 

** உங்கள் சேமிப்பில் இருந்து உங்களுக்கு வருமானம் வரும் வரை அதை செலவு செய்ய கூடாது 



இந்த கதை "The Richest Man in Babylon" புத்தகத்தின் கதை சுருக்கம்மே.


இந்த கதையை முழுமையாக படிக்க இந்த புத்தகத்தின் தமிழ் பதிவை கீழே இருக்கும் இணைத்தில் வாங்கி படிங்க. 

Amazon : The Richest Man in Babylon Tamil

இந்த பதிவு பிடித்து இருந்தால் மற்றவர்களிடம் பகிரவும் 


படித்து மகிழ் !!!

1 comment:

Gokul said...

அருமை! நல்ல வழி!

Write to Us !!

Name

Email *

Message *

Powered by Blogger.